சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

0
489
Tamilnadu convert Sugar Ration Card to Rice Ration Card

Tamilnadu convert Sugar Ration Card to Rice Ration Card

தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சர்க்கரை குடும்ப அட்டை வைத்துள்ளவர்கள் அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்ற விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. மொத்தம் 10,19,491 குடும்ப அட்டைதாரர்கள் சர்க்கரை மட்டும் வாங்கும் அட்டைகளை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சர்க்கரை குடும்ப அட்டை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்ற விண்ணப்பிக்கும் முறை

சர்க்கரை விருப்ப அட்டைதாரர்கள், அரிசி பெறக்கூடிய அட்டையாக மாற்ற ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் அல்லது விண்ணப்பத்துடன் ஸ்மார்ட் கார்டை நகல் எடுத்து வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரடியாக அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி பெறக்கூடிய அட்டையாக மாற்ற ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பது எப்படி?

ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, வலது ஓரத்தின் கீழே இருக்கும் ‘சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற’ என்று இருப்பதை கிளிக் செய்து அதற்குப் பிறகான வழிகாட்டுதல் மூலம் பதிவு செய்யலாம்.

  1. www.tnpds.gov.in இணையத்தளத்தில் ஏற்கனவே ரெஜிஸ்டர் செய்தவர்கள் “பயனாளர் நுழைவு” லிங்கை கிளிக் செய்யவும்
TNPDS1

2. இங்கு உங்களுடைய மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீடு கொடுத்து “பதிவு செய்” லிங்கை கிளிக் செய்யவும்

TNPDS2

3. தற்போது உங்களுடைய மொபைல் எண்ணிற்கு OTP வந்திருக்கும், அதனை இங்கே கொடுத்து என்டர் செய்யவும்

4. உள்ளே நுழைந்தவுடன் “சேவையை தேர்வு செய்யவும்” என்ற இடத்தில “அட்டை வகை மாற்றம்” செலக்ட் செய்து கிளிக் செய்யவும்

TNPDS3

5. தற்போது “பதிவு செய்” லிங்கை கிளிக் செய்யவும்

விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு சம்பந்தப்பட்ட துறை அதிகாரியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். துறை அதிகாரி ஒப்புதல் அளித்தவுடன் உங்கள் சர்க்கரை அட்டை அரிசி பெறும் அட்டையாக மாறிவிடும்

Also Read : தமிழக அரசு அம்மா இரு சக்கர வாகன திட்டம் 2020 – தருமபுரி மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here