தமிழக அரசு அம்மா இரு சக்கர வாகன திட்டம் 2020 – தருமபுரி மாவட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

தமிழக அரசு அம்மா இரு சக்கர வாகன திட்டம் 2020 | TN Amma Two Wheeler Scheme 2020 | Dharmapuri Amma Two Wheeler Scheme

0
246
தமிழக அரசு அம்மா இரு சக்கர வாகன திட்டம் 2020

தமிழக அரசு, அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், பணிபுரிந்து வரும் பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் இருசக்கர மோட்டார் வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது தர்மபுரி மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான அம்மா இரு சக்கர வாகன வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழக அரசு அம்மா இரு சக்கர வாகன திட்டம் 2020 பயன்பெறும் பயனாளிகளுக்கான தகுதிகள்

  • பெண்களுக்கான வயது வரம்பு 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
  • ஆண்டு வருமானம் 2,50,000 கீழ் உள்ள மகளிர்
  • அரசு சாரா நிறுவனங்கள் / தனியார் நிறுவனங்கள் / கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் / அரசு திட்டங்களில் பணிபுரிபவர்கள் / வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் / மாவட்ட மக்கள் கற்றல் மையம் (முகமை) / ASHA பணியாளர்கள் மற்றும் CBO’s Community Based Organisations ஆக பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம்

தருமபுரி – அம்மா இரு சக்கர வாகன திட்டம் 2020 விண்ணப்பிக்கும் முறை

மேற்குறிப்பிட்டுள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை அணைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் / தருமபுரி நகராட்சி அலுவலகம் மற்றும் அணைத்து பேரூராட்சிகளிலும் 23.11.2020 தேதி முதல் 31.12.2020 வரை கொடுக்கலாம்.

Application Form – AMMA Two Wheeler Scheme

அம்மா இரு சக்கர வாகன திட்டம் 2020 – விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Also Read : YSR Jala Kala Scheme – AP Free borewell for Farmers – Registration, Application Form

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here