ரேஷன் அட்டைக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு – தமிழக அரசு அறிவிப்பு

0
243
Tamil Nadu Govt Pongal Gift 2021

Tamil Nadu Govt Pongal Gift 2021 – Rs. 2,500 for Rice Ration Card Holders

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக மக்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு அறிவித்துள்ளார். பொங்கல் பரிசாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார், மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களும் இலவசமாக அளிக்கப்படும்

Tamil Nadu Government Pongal Gift 2021

  1. ரூ.2,500
  2. ஒரு கிலோ பச்சரிசி,
  3. சர்க்கரை
  4. திராட்சை
  5. முந்திரி
  6. ஒரு முழு நீளக் கரும்பு

How to get TN Govt Pongal Prize 2021

இது வரும் ஜனவரி 4ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதற்கான டோக்கன் வீடு வீடாக சென்று வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் ரேஷன் கடைகளுக்கு நேரடியாக வந்து பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர் என்று தெரிவித்துள்ளார்.

வழக்கமாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு உடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இம்முறை இரண்டரை மடங்கு அதிகமாக வழங்கப்படுகிறது.

Also Read : சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Source : TN Govt

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here