திருநங்கைளுக்கு ரூ.1,500 உதவித் தொகை : மத்திய அரசு வழங்குகிறது

0
104
திருநங்கைளுக்கு

திருநங்கைளுக்கு ரூ.1,500 உதவித் தொகை : மத்திய அரசு வழங்குகிறது

கொவிட்-19 தொற்று சூழல் காரணமாக வாழ்வாதரத்தில் இடையூறுகள் ஏற்பட்டதால், திருநங்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  நாட்டில் நிலவும் தற்போதைய சூழல், இவர்களை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக்கி, அடிப்படை தேவையான உணவு மற்றும் சுகாதாரத்துக்கு கூட  தீவிர பற்றாக்குறையை சந்திக்க வைத்துள்ளது.

பிழைப்பூதியம் :

தற்போதைய சூழலில் தங்களுக்கு உதவ வேண்டும் என திருநங்கைகளிடம் இருந்து மத்திய அரசுக்கு போன் அழைப்புகள் மற்றும் இ-மெயில் மூலம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதனால் திருநங்கைகளின் நலனை கவனிக்கும் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், திருநங்கைகளின் அடிப்படை தேவைகளுக்கு உடனடி உதவி அளிக்க  தலா ரூ.1,500 பிழைப்பூதியமாக வழங்க  முடிவு செய்துள்ளது. 

இந்த நிதியுதவி, திருநங்கைகள் தங்களின் அன்றாட தேவையை நிறைவேற்றிக் கொள்ள உதவும். மத்திய அரசின் இந்த உதவி குறித்த விழிப்புணர்வை பரப்ப வேண்டும் என தொண்டு நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள் ஆகியவை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. 

விண்ணப்பிப்பது எப்படி?

கீழ்கண்ட இணைப்பில் உள்ள படிவதத்தில் ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்ற அடிப்படை விவரங்களை தெரிவித்து இந்த உதவித் தொகைக்கு திருநங்கைகள் அல்லது அவர்கள் சார்பில் சமுதாய அமைப்புகள் விண்ணப்பிக்க முடியும்.

https://forms.gle/H3BcREPCy3nG6TpH7.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721277

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here